28 மார்ச், 2025

தாழிடப்படும் குரல்

 









கொம்புகள் தீட்டிய மாட்டினை

இருவர் கூட்டிச் செல்கின்றனர்
அவர்கள் ஆணோ பெண்ணோ அல்ல.
அடையாளமற்ற முகமற்ற இருவர்.
மாட்டின் மணி ஒலி
பாதையைச் சிலிர்க்கிறது.
அவர்களின் குரல் மந்தமாய் எரியும் மெழுகுச்சுடர்.
கதிநடையில் கனத்து விரிகின்றன தாமரைகள்.
ஒலியற்ற பாதையில் பெரும் சுடரென
மூளும் குரலில்
கதவுகள் தாழிடப்படுகின்றன.
வெறித்த மரங்களின் உதிர் இலைகள்
அவர்களின் குரலை ஏந்திக் கொள்கின்றன.
மாடு தலையசைக்கிறது
அதன் மணி ஒலி
ஏதோ ஒரு தேவாலயத்தின் சுவரில் ஒலிக்கிறது.
துயரங்களை கேளாச் செவிகளை தேவன் என்ன செய்வார்?
தன் செவிகளை மூடுவதைத் தவிர.
00