விட்டுவந்த ஞாபக்கிளைகளில்
வந்தமரும் பட்சியை
என்ன பெயர் சொல்லி அழைப்பது?
ஊர்ந்து கடக்கும் பொழுகளை
அரூபமாய் ஒலிக்கும் குரல்கள் நிரப்புகின்றன.
பாதங்கள் மிதக்கும் இரவில்
தனிமை மூடுகிறது அறையை.
எங்கிருந்து நிமிடங்கள் ஊர்ந்து வருகின்றன?
தனிமைக்கு
ஆமையின் கால்கள் எப்படி முளைத்துவிடுகின்றன?
வந்தமருகின்றேன் பூக்காட்டில்.
நீயோ நானோ
நம் மகவுகளோ பேசாத சொற்கள்
என்னைச் சூழ்ந்துமொய்க்கின்றன.
பிரிவு என்பது
பேசாத வார்த்தைகளே.
04.12.2024

0 comments:
கருத்துரையிடுக